மேகாலயாவில் யுரேனியம் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – சட்டப்பேரவையில் தீர்மானம்
மேகாலயா, 26 ஆகஸ்ட் (ஹி.ச.) மேகாலயாவில் யுரேனியம் சுரங்கம் அமைப்பதற்கும், யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை நிறுவுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் கான்ராட் சங்மா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தி
Meghalaya assembly


மேகாலயா, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

மேகாலயாவில் யுரேனியம் சுரங்கம் அமைப்பதற்கும், யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை நிறுவுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சர் கான்ராட் சங்மா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்திற்கு ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

மேகாலயாவில் நில உரிமைகள் தனித்துவமான அரசியலமைப்பு மற்றும் பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ், சமூகங்கள், குலங்கள் மற்றும் தனிநபர்களின் நில உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேகாலயாவின் டோமியாசியாட், வாக்யின், நோங்ஸ்டோயின் உள்ளிட்ட பகுதிகளில் யுரேனியம் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் யுரேனியம் சுரங்கம் அமைப்பதற்கான முயற்சிகளுக்கு உள்ளூர் மக்கள், பாரம்பரிய அமைப்புகள், மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக நல அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

யுரேனியம் சுரங்கத்தால் ஏற்படக்கூடிய சுகாதார பாதிப்புகள், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மக்கள் இடம்பெயர்வு உள்ளிட்ட அச்சங்கள் காரணமாகவே எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மேகாலயாவில் யுரேனியம் சுரங்கம் மற்றும் அதனை பதப்படுத்தும் எந்தவொரு ஆலையையும் அமைக்கக் கூடாது என வலியுறுத்தும் தீர்மானத்தை சட்டப்பேரவை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P