Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் குறிக்கும் புனிதமான மீலாதுன் நபி திருநாள் இன்று (ஆகஸ்ட் 26, 2026 ) அன்று இந்தியா முழுவதும் பக்தி மற்றும் வரலாற்று சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் 12-ஆம் நாளில் இந்த நன்னாள் கடைப்பிடிக்கப்படுகிறது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில், இந்த நாள் அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீலாதுன் நபி திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இஸ்லாமிய சொந்தங்களுக்கு மிலாடி நபி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
இறைவன் திருப்பெயரால் அன்பையும், அறநெறியையும், சமத்துவத்தையும், கொடையையும், மானுடப்பற்றையும் கற்பித்த மகத்தான வழிகாட்டி!
போற்றுதற்குரிய பெருமகனார் இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்திட்ட 'மீலாதுன் நபி' திருநாளில் என்னுயிர் இசுலாமியச் சொந்தங்களுக்கு அளவற்ற அன்பாளனும், நிகரற்ற அருளாளனுமாகிய எல்லாம்வல்ல ஏக இறைவன் அல்லாவின் பேரருள் கிடைக்கப்பெற அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b