மிலாது நபி நன்னாள் - இஸ்லாமிய மக்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து
சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச) மிலாது நபி நன்னாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இறைத்தூதர் நபிகள்
Cm


சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச)

மிலாது நபி நன்னாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில், அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய மிலாது நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோர் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என்பதையே நபிகள் நாயகம் அவர்கள் தனது போதனைகளின் மூலம் வலியுறுத்தியதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, சமூகத்தில் அன்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இந்த மிலாது நபி நன்னாளில் அனைத்து மக்களின் வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்து, ஒற்றுமையும் சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ