Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பணம் பதுக்கப்பட்ட வழக்கில் திருப்புமுனையாக, அலுவலரை சிக்க வைப்பதற்காகவே திட்டமிட்டு பணம் பதுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக 4 மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று 2 நாளாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.
தீயணைப்புத்துறை அலுவலகர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், அவரது அலுவலகத்தில் வேண்டுமென்றே பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார், இதற்கு உடந்தையாக இருந்த துறை சார்ந்த நபர்கள் யார் என்பது குறித்து வாக்குமூலங்கள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் இந்த விசாரணையின் முடிவில் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b