Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கக்கூடும் என்பதால் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் மாயமாகியுள்ளனர்.
நேபாளத்தின் மேல்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் போட்டே கோசி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஆறு திரிசூலி ஆறாகவும், பின்னர் இந்தியாவில் கண்டக் ஆறாகவும் பாய்வதால், கீழ்நோக்கி செல்லும் நீரின் அளவு திடீரென அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பீகாரில் கண்டக் ஆற்றை ஒட்டிய மாவட்டங்களில் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். திடீர் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆற்றங்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவையான சூழ்நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாநில நிர்வாகம் தயார்நிலையில் உள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் இந்திய எல்லையை கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P