Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மிலாடி நபி திருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மிலாடி நபி நன்னாளை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த நன்னாள் நம் அனைவரிடமும் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் வளர்க்கும் என்று நம்புகிறேன். கருணை மற்றும் சமூகத்திற்கு திருப்பிக் கொடுக்கும் மனப்பான்மை எப்போதும் நமக்கு வழிகாட்டட்டும்.
அனைவருக்கும் ஈத் முபாரக்! மிலாடி நபி நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மிலாடி நபி திருநாளையொட்டி பிரதமர் மோடி தெரிவித்துள்ள இந்த வாழ்த்துச் செய்தியில், ஒற்றுமை, மகிழ்ச்சி, கருணை மற்றும் சமூக நலனில் பங்களிக்கும் மனப்பான்மை ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA