Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள ரூ.42 கோடியை ஒதுக்கி நீர்வளத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்கள் வடகிழக்கு பருவமழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாக உள்ளன. இதையடுத்து, அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, கொசஸ்தலையாறு, ஆரணியாறு, பாலாறு, வெள்ளாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மொத்தம் 202 இடங்களில் பணிகள் நடைபெற உள்ள நிலையில், பெருநகர சென்னை பகுதியில் 76 பணிகளுக்கு ரூ.22.70 கோடியும், பிற பகுதிகளில் 126 பணிகளுக்கு ரூ.19.30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P