அன்பும் மகிழ்ச்சியும் பொங்கிப் பெருகட்டும் – ஓணம் பண்டிகைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து
சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.) உலகெங்கும் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாளான ஓணம்
CM Joseph Vijay


Gg


சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

உலகெங்கும் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஓணம் திருநாளில் அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் அன்பும் மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருக வேண்டும் என்றும், அழகிய வண்ணப் பூக்கோலம்போல் அனைவரது வாழ்க்கையும் பொலிவுடன் திகழ வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்தியுள்ளார்.

அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இந்த இனிய திருநாள், அனைவரது வாழ்விலும் நலத்தையும் வளத்தையும் வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும் வாழும் மலையாள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் ஓணம் திருநாளைக் கொண்டாட வேண்டும் என வாழ்த்தியுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், அனைவருக்கும் தனது இதயங்கனிந்த ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ