Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள தகவலில்,
தொடர்ந்து ஓய்வில் இருந்த வரும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரும் ஒன்றாம் (01-09-26) தேதி முதல் மீண்டும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கிறார். காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் பொதுமக்களையும் கட்சியினரையும் சந்திக்கிறார்.
தன்னை சந்திக்க வரும் பொதுமக்கள் பத்தும் கட்சியின் நிர்வாகிகள் அரசியல் பேச வேண்டாம் என்றும் குறிப்பாக பாமக தொடர்பான அரசியல் பேச வேண்டாம் மருத்துவர் ராமதாஸ் தரப்பில் இருந்து கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடந்த மாதம் 27ஆம் தேதி தனது 88-ஆவது பிறந்த நாளன்று உடல் நிலையை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
உடல்நிலை மற்றும் வயது மூப்பின் காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், தன்னை சந்திக்க வரும் தொண்டர்கள், பொதுமக்கள் அரசியல் பேச வேண்டாம் என மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த முரண்பாடு நீங்கி சமாதானம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் பாமகவின் தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாதத்திற்கும் மேலாக யாரையும் சந்திக்காமல் இருந்து வந்த மருத்துவர் ராமதாஸ் வரும் 1ஆம் தேதி முதல் சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN