மதுரையில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.100 ஆக உயர்வு
மதுரை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.) தேனி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பருவத்தில் சின்ன வெங்காய விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லாமல் கடுமையாக குறைந்துள்ளது. இதன் காரணமாக மதுரை சந்தைகளுக்கு வெங்காய வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வரத்து குறைவே தற்போத
Price of small onions rises to ₹100 per kg in Madurai.


மதுரை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

தேனி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பருவத்தில் சின்ன வெங்காய விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லாமல் கடுமையாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக மதுரை சந்தைகளுக்கு வெங்காய வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வரத்து குறைவே தற்போதைய விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

மதுரையின் முக்கிய மொத்த விற்பனை சந்தையான நெல்பேட்டை மொத்த சந்தையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மொத்த சந்தையிலேயே இந்த விலை என்றால், சில்லறை கடைகளிலும், உழவர் சந்தைகளிலும் இதன் விலை கிலோவுக்கு 100 ரூபாயை தாண்டி விற்கப்படுகிறது.

இதேபோல் பெரிய வெங்காயத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பெரிய வெங்காயத்தின் அறுவடை பாதிக்கப்பட்டு, தமிழகத்திற்கான வரத்து குறைந்துள்ளது.

இதனால் பெரிய வெங்காயத்தின் விலையும் கிலோ 80 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சமையலுக்கு இன்றியமையாத இரண்டு வகை வெங்காயங்களின் விலையும் ஒரே நேரத்தில் உயர்ந்துள்ளதால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

வரும் நாட்களில் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b