Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாடு முழுவதும் இன்று மலையாள மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
செழுமையின் அடையாளமாகவும், சமத்துவத்தின் சின்னமாகவும் விளங்கும் ஓணம் திருநாள், மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் உன்னதமான பண்டிகையாகும்.
மகாபலி சக்கரவர்த்தி தனது மக்களைக் காண ஆண்டுதோறும் வருகை தரும் நாளாக கருதப்படும் இந்த நன்னாள், மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் உலகிற்கு பறைசாற்றுகிறது.
புதுச்சேரியில் வாழும் மலையாள சகோதர, சகோதரிகள் உட்பட அனைத்து மக்களின் வாழ்விலும் இந்த ஓணம் திருநாள் எல்லையில்லா மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் கொண்டு வரட்டும். மக்கள் அனைவரிடையே நிலவும் நல்லிணக்கமும், சமாதானமும் மேலும் வலுப்பெற்று, ஓணம் தரும் ஒற்றுமை உணர்வு நம்மை என்றென்றும் நல்வழியில் ஊக்குவிக்கட்டும்.
மேலும் இந்த புனித திருநாளில் ஒவ்வொரு வீட்டிலும் தவழும் ஆனந்தம், ஆரோக்கியம், செல்வச் செழிப்பு ஆகியவை எந்நாளும் தொடர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் எனது இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
என்று முதல்வர் ரங்கசாமி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b