சங்ககிரியில் கோர விபத்து - டாரஸ் லாரி மோதி 23 வயது இளம்பெண் பலி
சேலம், 26 ஆகஸ்ட் (ஹி.ச.) சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த கோகுல்பிரியா, பணியை முடித்துவிட்டு ஆக்டிவா ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பயணியர் மாளிகை சாலை–திருச்செங்கோடு சாலை சந்திப்பு பகுதியில் சென்றபோது, அவ்வழியா
Hh


சேலம், 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

சேலம் மாவட்டம்

சங்ககிரி பகுதியைச் சேர்ந்த கோகுல்பிரியா, பணியை முடித்துவிட்டு ஆக்டிவா ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பயணியர் மாளிகை சாலை–திருச்செங்கோடு சாலை சந்திப்பு பகுதியில் சென்றபோது, அவ்வழியாக வந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த கோகுல்பிரியா மீது லாரியின் சக்கரம் ஏறியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி போலீசார், உயிரிழந்த கோகுல்பிரியாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்துக்கு காரணமான டாரஸ் லாரியை போலீசார் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ