தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!
சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் வழியே புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்க
அர்லேகர்


சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் வழியே புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்களில், முழுமையாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகிதம் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் திருத்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

இனிமேல் புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்களுக்கு மட்டுமே இந்த திருத்தச் சட்டம் செல்லுபடியாகும் என்று சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 ஆம் வகுப்பு வகுப்பு முதல் அரசு வேலைக்கான வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P