கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
விழுப்புரம், 26 ஆகஸ்ட் (ஹி.ச.) விழுப்புரம் அடுத்த சாலாமேடு பகுதியில் உள்ள மைதானத்தில் இன்று காலை இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சித்தேரிக்கரையைச் பகுதியை சேர்ந்த அஜிஸ்கான் (35) என்ற இளைஞர் பந்து வீசியுள்ளார். அப்போது திட
Vlp


விழுப்புரம், 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

விழுப்புரம் அடுத்த சாலாமேடு பகுதியில் உள்ள மைதானத்தில் இன்று காலை இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது சித்தேரிக்கரையைச் பகுதியை சேர்ந்த அஜிஸ்கான் (35) என்ற இளைஞர் பந்து வீசியுள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை சக வீரர்கள் விழுப்புரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அஜிஸ்கானை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இறந்தவரின் உடலை அவரின் குடும்பத்தார் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN