பரந்தூர் விவகாரத்தில் சமூக முடிவு எட்டப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று சென்னை, எழும்பூர், தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் 143-வது பிறந்த நாளை முன்
பரந்தூர் விவகாரத்தில் சமூக முடிவு எட்டப்படும் -  அமைச்சர் ராஜ்மோகன்


சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று சென்னை, எழும்பூர், தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார்,தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள், அரசு அலுவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகனிடம்

பரந்தூரில் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்த விவகாரத்தில் அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாக கூறினார்.

பரந்தூர் திட்டத்தை கைவிடுவது என்பதே முதல் படியாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்றும், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் விளக்கினார்.

குறிப்பாக, விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைப்பது தொடர்பாகவும், அதற்கான சட்ட நடைமுறைகள் குறித்தும் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்தார்.

விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், விரைவில் அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் சமூகமான தீர்வு எட்டப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b