Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 77 ஆயிரத்து 568 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும், 35 ஆயிரத்து 033 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.4 கோடியே 19 லட்சம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதேபோல், 4 லட்சத்து 15 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர்.
அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 497 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
22 முதல் 24 மணி நேரம் காத்திருப்பு
தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக சுமார் 22 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA