Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச)
வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
நேபாளத்தில் கைலாஷ் யாத்திரைக்கு 2025–2026ஆம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
கைலாய யாத்திரையின் போது ஏற்பட்ட விபத்தால் பல ஊர்கள் காணாமல் போயுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதிலும் சிக்கல் இருப்பதாகவும் கூறினார்.
எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மீட்புக் குழுவை அனுப்ப வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக மக்களுக்கு தெளிவான தகவல்களை அரசு வழங்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
கல்லூரிகளில் மாணவர் குழுக்களை அமைத்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்லூரி அரசியல் சரியாக இருந்தால், மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைப்பது உள்ளிட்ட ஜனநாயக செயல்பாடுகளை கற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்த போதிலும், தமிழகத்தில் கல்லூரி அரசியல் மோசமான நிலையில் இருப்பதாகவும், இதனால் எதிர்காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு இளம் தலைவர்கள் உருவாகும் வாய்ப்பு குறையும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
திரைத்துறையில் சென்சார் போர்டு விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும், திரைப்படங்கள் சென்சார் குறியீடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் திரைப்படங்கள் வெளியாகி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சமூக வலைதளங்களுக்கும் கட்டுப்பாடுகள் தேவை எனக் கூறிய அண்ணாமலை, சமூக
வலைதளங்கள் மூலம் நல்ல விஷயங்கள் நடைபெறுவதுடன், பல்வேறு தவறுகளும் நடைபெறுவதாக தெரிவித்தார்.
மற்ற நாடுகள் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை கொண்டு வரும் நிலையில், இந்தியா ஏன் தயங்குகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், போதைப்பொருட்களுக்கான தேவையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சட்டமன்றம் குறித்து அவர் கூறியதாவது:
சட்டமன்றம் டிராமா மன்றமாக இருக்கக்கூடாது.
ஆக்கப்பூர்வமாக மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் மன்றமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது பழைய பஞ்சாயத்துகளை தீர்த்துக்கொள்ளும் இடமாக சட்டமன்றம் மாறி வருகிறது.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்துகள் கூட சட்டமன்றத்தில் தீர்க்கப்படுகின்றன.
சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் இருக்கும் பஞ்சாயத்துகளும் அங்கேயே தீர்க்கப்படுகின்றன.
ஆளும் கட்சி சார்பில் உள்ள உறுப்பினர்கள் பலரும் புதியவர்கள்.
அவர்களும் வேகமாக முன்னேறி வருகின்றனர். இன்றைக்கு தமிழக சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறிவிடுமோ என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது என அண்ணாமலை விமர்சித்தார்.
இதனிடையே, ‘வி த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் இதுவரை 8 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும், 20 லட்சம் மரக்கன்றுகள் நடுவதே இலக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ