Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆவணி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பொது தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனத்திற்காக 2 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆவணி மாத பௌர்ணமி இன்று காலை 9.53 மணிக்கு தொடங்கி, நாளை 28ஆம் தேதி காலை 10.29 மணி வரை நீடிக்கிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்று வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 2 டன் வாழைப்பழங்கள், 30 ஆயிரம் பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் 40 ஆயிரம் லிட்டர் நீர்மோர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தனி வரிசையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / P YUVARAJ