Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச)
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த சித்திக் ஐஏஎஸ், நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டிருந்தார்.
இருப்பினும், கூடுதல் பொறுப்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியையும் அவர் தொடர்ந்து கவனித்து வந்தார்.
இந்த நிலையில், சித்திக் அந்த கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஆஷிஷ் சாட்டர்ஜி ஐஏஎஸ், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்தகட்ட பணிகள், விரிவாக்கத் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை புதிய நிர்வாக இயக்குனர் ஆஷிஷ் சாட்டர்ஜி தலைமையேற்று மேற்கொள்ள உள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ