Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள நாகசக்தி அம்மன் தியான பீடத்தில், தமிழ்நாடு–புதுச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பு சார்பில் விஸ்வகர்மா ஐந்து தொழிலாளர்கள் பூணூல் மற்றும் ஆவணி அவிட்டம் விழா சிறப்பாக நடைபெற்றது.
ஜகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூணூல் அணிந்து கொண்டனர்.
விஸ்வகர்மா கம்மாளர் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு இளைஞர்கள் முதன்முறையாக பூணூல் அணிந்து ஜகத்குருவிடம் ஆசி பெற்றனர்.
விழாவில் பேசிய ஜகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள், பூணூல் என்பது பஞ்சபூதங்களின் சக்தியை உள்ளடக்கியது என்றும், பரப்பிரம்மமாக விளங்கும் விஸ்வபிரம்மாவால் படைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
பூணூல் அணிவதன் மூலம் செல்வம், ஐஸ்வர்யம் மற்றும் ஆயுள் பலம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் ரிக் ரவி வரதராஜன், மலுமிச்சம்பட்டி செல்வராஜ், ஒத்தக்கால் மண்டபம் நடராஜன், மயிலேறிபாளையம் பரமசிவம், செட்டிபாளையம் கனகராஜ், மோகன் குமார், மோகன்ராஜ், குழந்தைவேலு உள்ளிட்ட விஸ்வகர்மா அமைப்பின் பல்வேறு பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான பூஜை நிகழ்வுகளை டாக்டர் கணேஷ்குமார் ஆச்சாரி மேற்கொண்டார்.
தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விஸ்வகர்மா அமைப்பின் சார்பில் பூணூல் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ