குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
தென்காசி, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் 3 நாட்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை
Courtallam Falls


தென்காசி, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் 3 நாட்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த மூன்று நாட்களாக தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மழை குறைந்து அருவிகளில் சற்று தண்ணீர் வரத்து சீராகி உள்ள நிலையில் மீண்டும் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நேற்று ஓணம் பண்டிகை முடிந்து ஏராளமான கேரளாவை சேர்ந்த மக்கள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து தங்களது குடும்பங்களுடன் குற்றால அருவியில் குளித்து மகிழ்ந்து வரும் நிலையில் குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது கணிசமாக உயர்ந்து காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN