Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்டன் பகுதியில் புலி தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புலியை சுட்டுப் பிடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் தொகுதி முழுவதும் 48 மணி நேர பொது வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் 9 மற்றும் 21ஆம் தேதிகளில் புலி தாக்கியதில் இருவர் உயிரிழந்ததால், அப்பகுதி மக்களிடையே அச்சமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
வனவிலங்குகள் தாக்கி மனித உயிர்கள் பலியாவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து இன்று முதல் சனிக்கிழமை காலை வரை நடைபெறும் வேலைநிறுத்தத்தில், கூடலூர் தொகுதி முழுவதும் சுமார் 10 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தால் கூடலூர் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam