மாணவர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு அவசியம் - தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் ‘ELC & ECINET’ மாநில மாநாடு நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பங்கேற்று உரையாற்றினார். பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் செயல்படு
Gnan


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் ‘ELC & ECINET’ மாநில மாநாடு நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பங்கேற்று உரையாற்றினார்.

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் செயல்படும் தேர்தல் கல்வியறிவு மன்றங்கள் மூலம் மாணவர்களிடையே தேர்தல் மற்றும் ஜனநாயகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஞானேஷ் குமார், தேர்தல் தொடர்பான புள்ளிவிவரங்கள் மட்டுமின்றி, தேர்தல் குறித்த விழிப்புணர்வும் மிகவும் முக்கியம் என்றார்.

இந்தியாவில் தேர்தல்கள் வெளிப்படையாக நடத்தப்படுகின்றன.

உலகிலேயே மிகவும் வெளிப்படையான முறையில் தேர்தல்கள் நடத்தப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் எதிர்காலமான மாணவர்கள் ஜனநாயக நடைமுறையை அறிந்து, அதன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். இதன் மூலம் தேர்தல் மற்றும் ஜனநாயகம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த முடியும்” என அவர் தெரிவித்தார்.

மேலும், “மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டிற்கு எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறினார்.

Hindusthan Samachar / P YUVARAJ