காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை - கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து இரு மடங்காக அதிகரிப்பு
மாண்டியா, 27 ஆகஸ்ட் (ஹி.ச) கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, மாண்டியா மாவட்டத்தில், ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு அருகில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த சில ந
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை - கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து இரு மடங்காக அதிகரிப்பு


மாண்டியா, 27 ஆகஸ்ட் (ஹி.ச)

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, மாண்டியா மாவட்டத்தில், ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு அருகில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக வினாடிக்கு 9,438 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 17,427 கன அடியாக அதிகரித்துள்ளது.

குடகு, வயநாடு உள்ளிட்ட காவிரியின் பிறப்பிட பகுதிகளில் பெய்யும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதே இந்த திடீர் உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

மொத்தம் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 109.75 அடியாக உள்ளது.

நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையிலும், அணையின் பாதுகாப்பு மற்றும் பாசனத் தேவையை கருத்தில் கொண்டு, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை கர்நாடக அரசு சீராக பராமரித்து வருகிறது.

அதன்படி, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,418 கன அடியில் இருந்து 2,454 கன அடியாக சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், கபினி அணையுடன் சேர்த்து தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b