Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு கர்நாடகா அணைகளில் இருந்து வரும் நீர்வரத்து கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.24 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 120 அடி ஆகும்.
தற்போது அணையில் உள்ள நீர் இருப்பு 51.78 டி.எம்.சி.யாக பதிவாகியுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது. நேற்று வினாடிக்கு 8,827 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 7,454 கன அடியாக குறைந்துள்ளது.
குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மட்டும் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்குவதை அடுத்து, காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக செப்டம்பர் 1-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளைச் சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b