Enter your Email Address to subscribe to our newsletters

கான்பூர், 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கங்கை நதிக்கரையோரம் உள்ள வயல்வெளியில் இரட்டை இன்ஜின் கொண்ட 4 இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானது.
இதில் விமான பயிற்சியாளரும், பயிற்சி விமானியும் உயிரிழந்தனர்.
கார்க் ஏவியேஷன் பயிற்சி மையத்திலிருந்து காலை 11.30 மணியளவில் விமானம் புறப்பட்ட நிலையில், சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு கங்கை தடுப்பணை அருகே நதிக்கரையோர வயலில் விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் பயிற்சியாளரான சச்சின் பாட்டியா மற்றும் பயிற்சி விமானியான அபிஷேக் பூஜாரி ஆகிய இருவர் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விமானத்தின் பாகங்கள் வயல்வெளியில் சிதறிக் கிடந்த நிலையில், விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து DGCA விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P