Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம் , 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி மது விற்பனை களைகட்டியுள்ளது.
பண்டிகை காலத்தின் முதல் 8 நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் ரூ.771.29 கோடி மதிப்பிலான மது விற்பனை நடைபெற்றுள்ளதாக கலால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநில மதுபானக் கழகமான ‘பெவ்கோ’ (Bevco) சார்பில் செயல்பட்டு வரும் விற்பனை நிலையங்களில் இந்த மது விற்பனை நடைபெற்றுள்ளது.
10 நாட்கள் கொண்ட ஓணம் பண்டிகை காலத்தில், ஆகஸ்டு 25-ந் தேதி வரையிலான முதல் 8 நாட்களில் ரூ.771.29 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு இதே 8 நாள் காலகட்டத்தில் ரூ.694.96 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
இதனுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ரூ.76.33 கோடி அதிகமாக விற்பனை நடந்துள்ளது.
இது சுமார் 11 சதவீதம் அதிகமாகும்.
உத்ராடம் நாளில் ரூ.126 கோடி
இதற்கிடையே, திருவோணத்துக்கு முந்தைய நாளான உத்ராடம் தினத்தில் மட்டும் ரூ.126.31 கோடி மதிப்பிலான மது விற்பனை நடைபெற்றுள்ளது.
கடந்த ஆண்டு உத்ராடம் நாளில் ரூ.137.64 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருந்தது. எனவே, இந்த ஆண்டு உத்ராடம் தின விற்பனை கடந்த ஆண்டைவிட ரூ.11.33 கோடி குறைந்துள்ளது.
இருப்பினும், ஓணம் பண்டிகையின் முதல் 8 நாட்களின் மொத்த விற்பனை கடந்த ஆண்டைவிட கணிசமாக அதிகரித்துள்ளது.
பண்டிகை காலத்தின் மீதமுள்ள நாட்களிலும் மது விற்பனை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA