செப்டம்பர் 1 முதல் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை
மதுரை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் புனிதத்தன்மை மற்றும் ஆன்மிக சூழலைப் பேணும் வகையில், வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயிலுக்
Alagar


மதுரை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் புனிதத்தன்மை மற்றும் ஆன்மிக சூழலைப் பேணும் வகையில், வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைப்பதற்காக, கோயில் நுழைவு வாயிலில் செல்போன் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் பக்தர்கள் தங்களது செல்போனை ரூ.5 கட்டணம் செலுத்தி ஒப்படைத்து, அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.

பின்னர் தரிசனம் முடிந்து கோயிலில் இருந்து வெளியே வரும் போது, ரசீதை காண்பித்து தங்களது செல்போனை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலின் புனிதத்தன்மையை பாதுகாப்பதுடன், பக்தர்கள் அமைதியான ஆன்மிக சூழலில் தரிசனம் மேற்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த உத்தரவை மீறி மறைமுகமாக செல்போனை கோயிலுக்குள் எடுத்துச் செல்லும் பக்தர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கள்ளழகர் கோயில் இணை ஆணையர் ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN