பெண்களுக்கான உதவித்தொகை வாக்குறுதி விவகாரம் - அகிலேஷ் யாதவை விமர்சித்த அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர்
உத்தரப் பிரதேசம், 27 ஆகஸ்ட் (ஹி.ச.) உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிக்கும் நிலையில், சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முனைப்பு காட்டி வருவதால், அடுத்த ஆண்டு இம்மாநிலத்தில் நடைபெ
பெண்களுக்கான உதவித்தொகை வாக்குறுதி விவகாரம் - அகிலேஷ் யாதவை  விமர்சித்த அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர்


உத்தரப் பிரதேசம், 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிக்கும் நிலையில், சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முனைப்பு காட்டி வருவதால், அடுத்த ஆண்டு இம்மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் குறிப்பிடத்தக்க அரசியல் போட்டிக்கான களத்தை அமைத்துள்ளது.

நேற்று லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகிலேஷ் யாதவ், பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்தார்.

ஹத்ராஸ் வழக்கைக் குறிப்பிட்ட அவர், 2023-ம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு அமல்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பினார்.

மேலும், 2027-ம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கையையும் அகிலேஷ் யாதவ் வெளியிட்டார்.

அதில் பெண்களாகிய 'பாதி மக்கள் தொகையினருக்கு முழுமையான சுதந்திரம்' அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

'ஸ்த்ரீ சம்மான் சம்ரித்தி யோஜனா' திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 வழங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் அந்தத் தொகை அதிகரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

கூடுதலாக, மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார்.

இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநில அமைச்சரும், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சித் தலைவருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர், பெண்களுக்கு நிதி உதவித்தொகை வழங்கப்படும் என்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் சமீபத்திய வாக்குறுதியைக் கடுமையாக விமர்சித்தார்.

தனது ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் விளிம்புநிலை சமூகத்தினரை அவர் புறக்கணித்ததை சுட்டிக்காட்டினார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்பர் கூறுகையில்,

அகிலேஷ் யாதவ் ஐந்து ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். அந்த ஐந்து ஆண்டுகளில் அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், பெண்கள், இளைஞர்களைக் கண்டுகொள்ளவில்லை.

இன்று பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு பெண்ணும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் வகையில் வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் 'லக்பதி தீதி' திட்டத்தை அறிவித்துள்ளார்.

இது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், வங்காளம், பீகார் மற்றும் தற்போது உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது.

அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக பெண்களின் கணக்குகளுக்கு நிதி மாற்றப்பட்டு வருகிறது

என்று அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b