ஆன்மீக சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை மீட்டுத்தர தேனி ஆட்சியரிடம் கோரிக்கை
தேனி, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியை சேர்ந்த செல்வம், அவரின் மனைவி சித்ராதேவி மற்றும் தாய் சரஸ்வதி ஆகிய மூன்று பேரும் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஆன்மீக சுற்றுலாவுக்காக நேபாளத்தின் பிரபல கைலாச யாத்திரைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில
Theni


தேனி, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியை சேர்ந்த செல்வம், அவரின் மனைவி சித்ராதேவி மற்றும் தாய் சரஸ்வதி ஆகிய மூன்று பேரும் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஆன்மீக சுற்றுலாவுக்காக நேபாளத்தின் பிரபல கைலாச யாத்திரைக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் பெரும் வெள்ளத்தில் திரிசூலி ஆற்றில் கரையோரம் உள்ள பல்வேறு மாவட்டங்கள் அடித்து செல்லப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகள் மண் குவியலில் புதைந்த நிலையில், அதில் சிக்கி 1்77-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 800-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் சுற்றுலாவிற்காக வந்த 133 இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா சென்ற 57 பேரில் 20 பேர் பத்திரமாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், மீதமுள்ளவர்களின் நிலை குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

குடியிருப்புப் பகுதிகளில் கட்டடங்களுக்குள் காற்றாற்று வெள்ளம் புகுந்து தரைமட்டமாக்கிய நிலையில், ஆழமாக புதைந்தவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இந்த சூழலில், தேனி மாவட்டத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலாவிற்காக சென்ற மூன்று பேரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவர்களை கண்டறிந்து மீட்டுத் தரக் கோரி அவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN