நேபாளம் வெள்ளப்பெருக்கு - தமிழர்களை மீட்க சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மீதான மானியக் கோரிக்கை விவ
சட்டப்பேரவை


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இந்தநிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது,

நேபாள வெள்ளத்தில் 160 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 750 பேர் மாய்மாகியுள்ளதாகவும் செய்திகள் வருகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் உட்பட பலர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாநில அரசு உடனடியாக அமைத்துள்ள உதவி எண்களுக்கு வந்த அழைப்புகள் எத்தனை, அதன் பேரில் டெல்லி தமிழ்நாடு இல்லம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி,

தமிழ்நாட்டிலிருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற 57 பேரின் நிலையை சுட்டிக்காட்டினார்.

அவர்கள் அனைவரையும் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பாக மீட்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் பாமக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P