நேபாள பேரிடர் - மீட்பு பணிகளை கண்காணிக்க 4 அமைச்சர்கள் டெல்லி செல்ல முதலமைச்சர் உத்தரவு
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரைத் தொடர்ந்து, அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை
விஜய்


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரைத் தொடர்ந்து, அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கவும், நேபாள அதிகாரிகளுடன் இணைந்து செயல்படவும், தமிழ்நாடு இல்லத்தின் டெல்லி உள்ளிருப்பு ஆணையர் ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவை காத்மாண்டுவுக்கு அனுப்ப முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மீட்கப்பட்டவர்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பொதுப்பணித்துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மை மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர்கள் டெல்லி சென்று, ஒன்றிய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக வழங்கவும், அவர்களை பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam