செஞ்சி அரசு மருத்துவமனைக்கு நவீன கருவிகள் வேண்டும் - பா.ம.க எம்.எல்.ஏ கணேஷ்குமார் கோரிக்கை
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச) சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது செஞ்சி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அ.கணேஷ்குமார், செஞ்சி அரசு மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் குறித்து கவன ஈர்ப்பு கேள்வியை எழுப்பினார். செஞ்ச
செஞ்சி அரசு மருத்துவமனைக்கு நவீன கருவிகள் வேண்டும் - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் கோரிக்கை


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச)

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது செஞ்சி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அ.கணேஷ்குமார், செஞ்சி அரசு மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் குறித்து கவன ஈர்ப்பு கேள்வியை எழுப்பினார்.

செஞ்சி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் தினமும் பெருமளவில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

ஆனால் அவசர சிகிச்சைக்கு தேவையான சி.டி. ஸ்கேன் வசதி இல்லாததால் நோயாளிகள் விழுப்புரம் அல்லது திருவண்ணாமலைக்கு அலைய வேண்டியுள்ளது.

அதேபோல செஞ்சி அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு போதிய நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லை.

இந்த இரண்டு மருத்துவமனைகளுக்கும் தேவையான நவீன மருத்துவ உபகரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், செஞ்சி அரசு மருத்துவமனைக்கு நவீன மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

செஞ்சி அரசு மருத்துவமனையில் தற்போது 106 படுக்கை வசதிகள் உள்ளன. ஆனால் அதில் 86 சதவீதம் அளவிற்கு மட்டுமே படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன.

பயன்பாட்டை கருத்தில் கொண்டு நோயாளிகளின் வருகை மற்றும் தேவையை பொறுத்து கூடுதல் கட்டிடம் கட்டுவது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

Hindusthan Samachar / vidya.b