Enter your Email Address to subscribe to our newsletters

திருத்தணி, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
பிராமணர்களின் முக்கிய பண்டிகையான ஆவணி அவிட்டம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூணூல் அணியும் வைதீகர்கள் பழைய பூணூலை களைந்துவிட்டு புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள்.
இந்த புனித நிகழ்வை முன்னிட்டு திருத்தணி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் நடை இன்று மதியம் 12 மணிக்கு மூடப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.
நடை அடைக்கப்படும் இந்த நான்கு மணி நேரத்திற்கும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் காத்திருக்கவும் அனுமதி இல்லை.
மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்ட பிறகு வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். இரவு 8.45 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பக்தர்கள் தங்களது தரிசனத்தை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b