Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
திபெத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திபெத் வெள்ள பாதிப்பு தொடர்பான தகவல்களை பெறவும், உதவிகளை கோரவும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800 309 3793 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அயலக வாழ் தமிழர்களுக்காக பிரத்யேகமாக +91 8069009901 மற்றும் 08069009901 ஆகிய எண்களில் அழைத்து விவரங்களை கேட்டறியலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நேரடியாக பேச இயலாதவர்கள் +91 806909900 மற்றும் 08069009900 ஆகிய எண்களில் மிஸ்டு கால் கொடுத்தால், அரசு அதிகாரிகள் திரும்ப அழைத்து உரிய உதவிகளை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 9289516712 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.
மேலும் நேபாள பேரிடரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உதவிக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் +977 9851316807 மற்றும் +977 9709107500 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b