Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதி சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கோவை கிங்ஸ்–திருச்சி அணிகள் மோதின.
டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கோவை அணி, தொடக்க வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் நல்ல தொடக்கம் கண்டது. பின்னர் வந்த மிடில் ஆர்டர் வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
குறிப்பாக கடைசி ஓவர்களில் பவுண்டரிகள், சிக்சர்கள் விளாசப்பட்டதால் கோவை அணியின் ரன் வேகம் அதிகரித்தது.
20 ஓவர்கள் முடிவில் கோவை கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது.
இதனால் திருச்சி அணிக்கு 184 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கை நோக்கி களம் இறங்கிய திருச்சி அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியின் கேப்டன் ஜெயராமன் மட்டும் பொறுப்புடன் விளையாடி 48 ரன்கள் எடுத்தார்.
அவருக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு அளிக்காததால், திருச்சி அணியின் ரன் வேட்டை நீடிக்கவில்லை.
கோவை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திருச்சி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் அந்த அணி 15.4 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கோவை அணியின் மணிமாறன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி திருச்சி அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இதன் மூலம் திருச்சி அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA