கோவையில் புதிய டொயோட்டா ஹைலக்ஸ் அறிமுகம்!
கோவை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில், டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஹைலக்ஸ் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஆனைமலைஸ் டொயோட்டா நிர்வாகிகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வாகன
கார்


கோவை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில், டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஹைலக்ஸ் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆனைமலைஸ் டொயோட்டா நிர்வாகிகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வாகன ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

புதிய ஹைலக்ஸ் வாகனத்தில் 2.8 லிட்டர் பிஎஸ்6 பேஸ்-2 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 204 பிஎஸ் சக்தி மற்றும் 500 என்.எம். டார்க் திறனை வழங்குகிறது.

6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் மற்றும் 80 லிட்டர் எரிபொருள் டேங்க் இடம்பெற்றுள்ளது.

4x4 இயக்க வசதியுடன், எலக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக், டவுன்ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், மல்டி டெர்ரெயின் செலக்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் சவாலான சாலைகள் மற்றும் ஆஃப்-ரோடு பயணங்களில் சிறப்பான செயல்திறனை வழங்கும் வகையில் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெளிப்புறத்தில் புதிய கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், டேடைம் ரன்னிங் லைட்கள், எல்இடி பனி விளக்குகள் மற்றும் அலாய் சக்கரங்கள் இடம்பெற்றுள்ளன.

உட்புறத்தில் 12.3 அங்குல தொடுதிரை, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, டொயோட்டா ஐ-கனெக்ட், டிஎஃப்டி தகவல் திரை, வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன.

பாதுகாப்பு அம்சங்களாக 7 ஏர்பேக்குகள், வாகன நிலைத்தன்மை கட்டுப்பாடு, ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், ஐஎஸ்ஓஃபிக்ஸ், டயர் பிரஷர் கண்காணிப்பு, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், பனோரமிக் வியூ மானிட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆனைமலைஸ் டொயோட்டா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

புதிய ஹைலக்ஸ் வாகனத்தை வாங்க ஆர்வமுள்ளவர்கள் ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமிற்கு நேரில் சென்று வாகனத்தை பார்வையிட்டு, டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கலாம் என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P