மணல் கொள்ளையைத் தடுக்க த.வெ.க அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் – டி.டி.வி தினகரன்
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச) திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறு
TTV Dhinakaran


Bb


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச)

திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, உளுந்தூர்பேட்டையில் மணல் கொள்ளை தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட இரு பெண்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மணல் கொள்ளை தொடர்பான புகார்களில் காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாகவும், இதன் பின்னணியில் ஆளுங்கட்சியினர் மற்றும் சில அரசு அதிகாரிகளின் தலையீடு இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையை அரசியல் பாரபட்சமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தவெக அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ