மக்கள் நலத்திட்டம் என்ற பெயரில் குடும்ப நலன் பேணிய கதை – தி.மு.க-வை விமர்சித்த த.வெ.க
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரில் குடும்ப நலனைப் பேணியதாக திமுகவை விமர்சித்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடுமையாக சாடியுள்ளது. இதுதொடர்பாக தவெக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு கதை சொல்லட்டுமா சார்! மக்
தவெக


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரில் குடும்ப நலனைப் பேணியதாக திமுகவை விமர்சித்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடுமையாக சாடியுள்ளது.

இதுதொடர்பாக தவெக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஒரு கதை சொல்லட்டுமா சார்! மக்கள் நலத்திட்டம் என குடும்ப நலன் பேணிய கதை இது” எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்பட்ட வண்ணத் தொலைக்காட்சியை, “எங்க தாத்தா கொடுத்தது” என திமுகவினர் மார்தட்டிக் கொள்வதாக விமர்சித்துள்ள தவெக, தொலைக்காட்சி வழங்கியதுடன் நிறுத்தாமல், கேபிள் கட்டணம் என்ற பெயரில் குடும்ப ஆதிக்க நிறுவனங்கள் மூலம் மக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

வெளியில் “மக்கள் நலத்திட்டம்” எனக் கூறிவிட்டு, உள்ளுக்குள் “குடும்ப நலனை” காத்ததாக திமுகவை விமர்சித்துள்ள தவெக, “வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும் தவெக ஆட்சியை தேர்ந்தெடுத்த மக்கள் இனியும் உங்களது கட்டுமரக் கதைகளை நம்ப தயாராக இல்லை” எனவும் தெரிவித்துள்ளது.

இந்தப் பதிவு மூலம் திமுகவின் முந்தைய ஆட்சிக் கால மக்கள் நலத்திட்டங்களையும், குடும்ப ஆதிக்கம் தொடர்பான விமர்சனங்களையும் முன்வைத்து தவெக அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P