Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில், உலகின் முதன்முறையாக அதிநவீன பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி சிகிச்சை மையம் இன்று திறக்கப்பட்டது.
இந்த அதிநவீன சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் விஜய் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
பின்னர் முதல்வர் நுண்துளை கருவிழி சீரமைப்பு அறுவைசிகிச்சை செய்து கொண்டவரிடம் தற்போதைய கண் பார்வைத் திறன் குறித்துக் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின்போது, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் அமர் அகர்வால், விட்ரியோ-ரெட்டினல் சேவைகள் இயக்குநர் மனோஜ் கத்ரி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்,
கருவிழியில் ஏற்படும் சிக்கலான பிரச்சினைகளால் பார்வைக் குறைபாட்டால் அவதிப்படும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இந்த புதிய மையம் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று தெரிவித்தார்.
தமிழகம் மருத்துவத் துறையில் உலக அளவில் முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு இதுபோன்ற அதிநவீன கண்டுபிடிப்புகளே சான்று என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி என்பது கருவிழி பாதிப்பு, பிறவி கருவிழி கோளாறுகள், விபத்துக்களால் ஏற்படும் கருவிழி சேதம் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் ஒளி கூச்சம், இரட்டைப் பார்வை போன்ற சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் ஒரு புரட்சிகரமான சிகிச்சை முறையாகும்.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் நிபுணர்களால் உருவாக்கப்பட்ட இந்த பிரத்யேக தொழில்நுட்பம், கருவிழியை சீரமைத்து, நோயாளிகளுக்கு தெளிவான பார்வையை மீட்டுத் தருகிறது.
இந்த மையத்தின் மூலம், இதுவரை தீர்வு காண முடியாத கருவிழி பிரச்சினைகளுக்கு இனி சென்னையிலேயே உலகத் தரத்திலான சிகிச்சை கிடைக்கும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b