கோடிக்கணக்கான சகோதரிகளை கடவுள் எனக்கு துணையாக கொடுத்துள்ளார்- ராக்கி பண்டிகையையொட்டி அமைச்சர் லோகேஷ் உருக்கம்
அமராவதி , 28 ஆகஸ்ட் (ஹி.ச.) ராக்கி பண்டிகையையொட்டி ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ், தெலுங்கு மாநிலங்களைச் சேர்ந்த அக்கா, தங்கைகள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு உடன்ப
A


அமராவதி , 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

ராக்கி பண்டிகையையொட்டி ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ், தெலுங்கு மாநிலங்களைச் சேர்ந்த அக்கா, தங்கைகள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தனக்கு உடன்பிறந்த சகோதரிகள் இல்லாத நிலையில், கடவுளே கோடிக்கணக்கான சகோதரிகளை துணையாக கொடுத்துள்ளதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கு மாநிலங்களில் தான் எங்கு சென்றாலும் அக்கா, தங்கைகள் காட்டும் அன்பையும் பாசத்தையும் ஒருபோதும் மறக்க முடியாது என்றும், பெண்கள் காட்டும் இந்த அன்பு தனக்குள் மேலும் பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் மக்கள் அரசின் முக்கிய பொறுப்பு என்று தெரிவித்துள்ள நாரா லோகேஷ், சிறு வயது முதலே பெண்களை மதிக்கும் வகையில் குழந்தைகளுக்கு நற்பண்புகள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த கல்வியை வழங்கி வருவதாக கூறியுள்ளார்.

மேலும், உயிருக்கு நிகரான தெலுங்கு குடும்பங்களின் அக்கா, தங்கைகள் அனைவருக்கும் ராக்கி பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA