Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தொடர்பான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது, திமுக வேட்பாளர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக முதல்வர் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.
இந்தத் தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்த திமுக வேட்பாளர்கள் மற்றும் தொடர்புடைய மனுதாரர்கள் தங்களது பதிலைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 3-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி வி.லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ