கிராண்ட் செஸ் டூர் 2026 சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து
சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.) அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று, இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட
Prag


சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று, இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த வீரர்களுடன் நடைபெற்ற போட்டிகளில் அபாரமான மனஉறுதியுடனும், மதிநுட்பத்துடனும் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது, பிரக்ஞானந்தாவின் அசாதாரண திறமை மற்றும் விடாமுயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த மகத்தான வெற்றி இளம் தலைமுறையினருக்கு புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைக்க பிரக்ஞானந்தாவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ