கோவை குற்றாலம் அருவி இன்று மீண்டும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு திறப்பு
கோவை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.) வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி, மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த 2
Covai Courtallam


கோவை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி, மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த 25ஆம் தேதி கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வனத்துறையினர் அருவி மற்றும் சூழல் சுற்றுலா பகுதிக்கு தற்காலிகமாக தடை விதித்தனர்.

தொடர்ந்து மழை மற்றும் நீர்வரத்து நிலவரத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். தற்போது அருவியில் நீரின் அளவு சீரான நிலைக்கு திரும்பியுள்ளதால், இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்குப் பிறகு அருவி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தர வாய்ப்புள்ளது. அருவியில் குளிக்கும் போது வனத்துறையினர் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN