Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்டன் பகுதியில் ஆகஸ்ட் 9 மற்றும் 21-ஆம் தேதிகளில் புலி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.
இதையடுத்து அச்சமடைந்துள்ள பொதுமக்கள், மனிதர்களைக் கொன்ற புலியை சுட்டுப் பிடிக்க வேண்டும் என்றும், வனவிலங்குகள் தாக்கி மனித உயிர்கள் பலியாவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கூடலூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் நேற்று காலை முதல் 48 மணி நேர பொது வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இன்று 2-வது நாளாகவும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகள் மற்றும் வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தொகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தனியார் பள்ளி பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயக்கப்படவில்லை. மேலும், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam