பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என்.சி.சி மாணவிகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்
புதுடெல்லி, 28 ஆகஸ்ட் (ஹி.ச.) அண்ணன் - தங்கை மற்றும் தம்பி - அக்கா இடையேயான பாசத்தையும், பாதுகாப்பையும் கொண்டாடும் ஒரு பாரம்பரியமிக்க இந்தியப் பண்டிகையான ரக்ஷா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் புதுடெல்லியில் உள்ள த
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என்.சி.சி  மாணவிகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்


புதுடெல்லி, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

அண்ணன் - தங்கை மற்றும் தம்பி - அக்கா இடையேயான பாசத்தையும், பாதுகாப்பையும் கொண்டாடும் ஒரு பாரம்பரியமிக்க இந்தியப் பண்டிகையான ரக்ஷா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ரக்ஷா பந்தன் பண்டிகையை மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படை (NCC) மாணவிகளுடன் இணைந்து உற்சாகமாக கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் அமைச்சருக்கு ராக்கி கயிறு கட்டி தங்களது பாசத்தையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த பண்டிகை வெறும் சடங்கு மட்டுமல்ல, சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான ஆழமான பாசம், அன்பு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடையாளம் என்று குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், நம் சமூகத்தில் பெண்களின் கண்ணியத்தை பாதுகாப்பதும், அவர்களின் அதிகாரமளித்தலை உறுதி செய்வதும் ஒவ்வொருவரின் கூட்டுப் பொறுப்பு என்று வலியுறுத்தினார்.

சகோதரத்துவத்தை போற்றும் இந்த புனித திருநாள், பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் என்றும் அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b