Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும், குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
மேலும், குறுவை சாகுபடி செய்யாததால் வேலைவாய்ப்பை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam