Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஈரோட்டில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
ஈரோட்டில் யங் இந்தியன் அமைப்பு சார்பில் மாதிரி பார்லி மன்றம் நடந்து கொண்டிருக்கிறது
இதன் மூலம் ஜனநாயக ரீதியாக மாணவர்களுக்கு ஒரு பங்களிப்பு இருக்க வேண்டும் அப்போதுதான் மக்கள் பங்களிக்கக்கூடிய ஜனநாயகமாக இருக்கும்
நாடு முழுவதும் மாணவர் மத்தியில் ஒரு எழுச்சி இருப்பதை பார்க்க முடிகிறது அந்த நேரத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நிகழ்வாக இருக்கிறது, இந்த மன்றத்தின் மூலம் மாணவ மாணவிகள் மத்தியில் அரசியல், கல்வி, சமூகம் சார்ந்த தெளிவான புரிதல் பார்க்க முடிகிறது
இந்திய அரசியலமைப்பு பிரதிநிதித்துவம் ஜனநாயகமாக இருப்பதால் மக்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் நிலையில் மக்கள் அவர்களை கேள்வி கேட்க வேண்டும் மக்கள் சந்திப்பு நடக்க வேண்டும் அவர்களுடன் மக்கள் உரையாட வேண்டும்
சட்டமன்றத்தில் பாராளுமன்றத்தில் பெண்கள் குறைவான சூழல் இருக்கும் நிலையில் இருக்கிறது,
இந்தியா முழுவதும் கல்வி முறைகள் மீது திருப்தி இல்லாத சூழல் இருக்கிறது கல்வி முறைகள் நீண்டகாலமாக மாற்றப்படாமல் இருக்கிறது,
அரசியலமைப்பு கல்வி முறையில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் உடற்கல்வி வகுப்புகள் நாளடைவில் மற்ற பிரிவு வகுப்பு ஆசிரியர்களால் பயன்படுத்தப்படுகிறது
கல்வியில் அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் அப்போதுதான் சட்டமன்ற நாடாளுமன்றம் உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றில் உள்ள அமைப்புகள் குறித்து புரிந்து கொள்ள முடியும் கல்வியில் அரசியலமைப்புச் சட்டத்தின் சுருக்கத்தை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்
பாலின சமத்துவத்தை பள்ளியில் இருந்து கொண்டு வர வேண்டும்
வருங்கால பிரதமர் முதல்வர் விஜய் தான் இன்று முன்வைத்தோம் பிரச்சாரத்திற்கு பதில்:
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த பதவிக்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று சொல்லலாம். அந்த உரிமை ஜனநாயகம் எல்லோருக்கும் தருகிறது.
அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் இது சொல்லப்படுவது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில் ஜெயலலிதா காலத்தில் மோடியா லேடியா என்று பிரச்சாரம் முன்வைத்து தான் நாடாளுமன்ற தேர்தல் சந்திக்கப்பட்டது, இது தேர்தலுக்கான யுக்திகளாக நான் கருதுகிறேன்,
நரேந்திர மோடி அரசாங்கத்தை அச்சமற்று எதிர்க்கக் கூடிய அந்த அரசாங்கத்தை வீழ்த்தக்கூடிய வல்லமை ராகுல் காந்தியிடம் உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வருவதற்கான கருத்துக்கணிப்பு என்பது கருத்து திணிப்பாக பார்க்கிறேன்.
காரணம் தமிழ்நாட்டில் கூட நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கருத்துக்கணிப்பு ஒழுங்காக கணிக்கப்படவில்லை.
நரேந்திர மோடியின் வீழ்ச்சி மிகவும் வெளிப்படையாக தெரிகிறது வட இந்தியாவில் மாணவர்கள் நேரடியாக மிகவும் மோசமான விமர்சனங்கள் தண்டனை தர முடி மீது முன்வைக்கிறார்கள். இதனால் இதுபோன்ற விமர்சனத்தை மறைப்பதற்காக கருத்துக்கணிப்புகள் நடத்தப்படுகிறது.
பிரதமர் வேட்பாளராக விஜய் முன்னிறுத்தப்படுவதற்கு குறித்த கேள்விக்கு பதில்:
காங்கிரஸ் பக்குவம் அடைந்த அரசியல் கட்சி. ஜனநாயகத்தின் மீது முழுக்க முழுக்க நம்பிக்கை கொண்ட கட்சி காங்கிரஸ் கட்சி. இந்த சூழலில் மற்றொரு அரசியல் கட்சியை இப்படி அப்படி பேச கூடாது என்று சொல்லக்கூடாது. அது எங்களது வேலையும் இல்லை.
மிக உறுதியாக மாணவர்கள் போராட்டத்திற்கு அடிப்படையாக ராகுல் காந்தி தான் முன்னெடுத்து வைத்திருந்தார், தர்மேந்திர பிரதாப் ராஜினாமா செய்திருக்கும் ராகுல் காந்தி தான் காரணம்,
ராகுல் காந்தி மட்டும் தான் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவையும் ஆர்எஸ்எஸ்யையும் அச்சமின்றி எதிர்ப்பார் தவிர மற்ற யாராவது ஒருவரை சொல்லுங்கள். அந்த நிலைப்பாட்டை தான் மக்களும் எடுப்பார்கள் அப்படி ஒரு தலைமை உறுதியாக கொள்கை நிலைப்பாடுகள் உள்ள தலைமை தான் இந்தியாவுக்கு தேவை அந்த தலைவர் ராகுல் காந்தி தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.
திமுகவில் தான் காங்கிரஸ் கட்சி வளர்ந்தது என்ற கேள்விக்கு பதில்:
எந்த கட்சியும் இன்னொரு கட்சியால் வளராது கட்சிக்கென்று கொள்கை ஏற்படும் கோட்பாடு இருக்கணும் அந்த கட்சி மக்களை சந்திக்க வேண்டும். மக்களும் அந்த கட்சியை ஏற்றுக் கொண்டால் தான் அந்த கட்சி வளர முடியும் இது பற்றி தெரியாமல் திமுகவினர் பேசுவது அரசியல் பற்றிய புரிதல் இல்லாமல் பேசுவதாக கருத வேண்டும்
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவார்கள் எந்த அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார்கள.
எந்த அரசாங்கம் இருந்தாலும் கால அவகாசம் வேண்டும், அனுபமில்லாத அமைச்சர்கள் வந்திருக்கிறார்கள்
அவர்களுக்கு கால அவகாசம் என்றும் 100 நாட்களில் எல்லாம் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றால் எப்படி நிறைவேற்ற முடியும் என்பதை நடைமுறையாக யோசிக்க வேண்டும்
சட்டமன்றம் கண்ணியமாக நடக்க வேண்டும். நாகரிகமாக கலந்துரையாடல் நடக்க வேண்டும். மக்களுக்கு பிரயோஜனமாக மக்கள் பிரச்சனைகளை விவாதிக்கும் இடமாக சட்டமன்றம் இருக்க வேண்டும்.
சட்டமன்றம் அதிக நேரம் நடத்தி இருக்கிறார்கள். அதிக எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் தரம் என்பது கொஞ்சம் வருத்தப்படக் கூடிய அளவில் இருக்கிறது. அதை சபாநாயகர் உணர்ந்து இருக்கிறார்.
சபாநாயகர் எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். இதனால் அரசு வேதனை சரி செய்து கொள்ளும் என நினைக்கிறேன்
தொகுதி மறுவரை பொறுத்தவரை ஒவ்வொரு 10ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கவில்லை , தென் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் பஞ்சாப் போன்ற மாநிலங்கள் மக்கள் தொகை தீவிரமாக கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்.
இதனால் இந்த மாநிலங்களுக்கு தொகுதி மறு வரை பாதகமாக முடியும். அதனால் 543 தொகுதிகள் போதுமானது என்று பேசினார்.
Hindusthan Samachar / ANANDHAN