Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
தங்கம் விலை நாளுக்குநாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்ந்த வாரம் படிப்படியாக குறைந்து வருகிறது.
அதன்படி, நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,940-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் தங்கம்
ரூ.1,19,520-க்கும் விற்பனை செய்யப்படுட்டது.
அதேபோல வெள்ளி விலை மாற்றமின்றி ஒருகிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுட்டது.
அந்தவகையில் இன்று அதங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,200க்கும், கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,650க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி ஒருகிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து
ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
Hindusthan Samachar / VINOTH KUMAR P