உதம்பூர் அருகே இரண்டு டேங்கர் லாரிகள் நேருக்கு நேர் மோதி பயங்கர தீ விபத்து
ஜம்மு-காஷ்மீர், 28 ஆகஸ்ட் (ஹி.ச.) ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் மல்ஹார் அரண்மனை பகுதிக்கு அருகே ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று இரண்டு டேங்கர் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த
Massive fire breaks out after two tanker trucks collide head-on near Udhampur.


ஜம்மு-காஷ்மீர், 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் மல்ஹார் அரண்மனை பகுதிக்கு அருகே ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று இரண்டு டேங்கர் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மோதலின் வேகத்தில் இரு டேங்கர்களிலும் தீ பிடித்து மளமளவென பரவியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் அவசர சேவைத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீ மேலும் பரவாமல் தடுக்க பல வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்தையடுத்து பாதுகாப்பு கருதி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தினர். இதனால் நெடுஞ்சாலையின் ஒரு பக்கத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

இது குறித்து பேசிய அதிகாரி ஒருவர்,

தற்போதைக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்தை நிறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழப்பு அல்லது காயம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b